வைரமுத்துவின் ஒரு வருட உழைப்பில் சமைத்த தண்ணீர் தேசத்தை
மூன்று நாட்களின் சில மணி துளிகளில் என் மனம் நிறைய
அருந்தியதற்கு ஒரு நன்றி கடன் !
மூன்று நாட்களில் பூமியில் இருந்து கொண்டே
கடல் பயணம் சென்று வந்த நினைவு!
அந்த தேசம்
உவமைகளின் தேசம்
கற்பனை நதிகள் பல கலந்த தேசம்
வாழ்க்கையின் நியாய அநியாயங்களை
வேரறுத்த தேசம்
ஆக்சிஜெனுடன் நம்பிக்கையையும்
சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம்
என பாடம் நடத்திய தேசம்
அனைவரும் வாழ்வதற்காக ஓரமாக ஒதுங்கி வாழும்
ஒதுக்கப்பட்டு வாழும் ஒராயிரம் கோடி கடலோர மக்களின்
வாழ்க்கை பிரதிபலிபிற்கான தேசம்
காதல், தசை நேசமல்ல
உயிர் நேசம் என்பதை உணர்த்தும் உறவுகளின் தேசம்
என் ஜீவனில் வற்றி போன தமிழ் நதி
ஊற்றெடுத்ததற்கு காரணமான தமிழ் தண்ணீர் தேசம்
நட்புக்கு 100 சதவிகித அர்த்தம் சொல்லும்
நேசங்கள் வாழ்ந்த தேசம்
பல அறியாத அறிவியல் புதிர்களை
அழகிய தமிழில் மொழி பெயர்த்த தேசம்
உங்களை
இந்த தேசத்தை ஒரு முறையாவது
பார்த்து விட ஒரு பயணச்சீட்டு நானாக
இருப்பேன் என நம்பிக்கை கொடுத்த தேசம்
Thursday, December 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Mokkaya irukkuppa..
Please Stop writing this kind of things..
It's my Humble Request.
un KIRKKALGAL en udalukkul sattru sarukkalgal aadivittana
Thanks nice comment
Post a Comment