Thursday, December 4, 2008

பயங்கரவாதிகள்

கடவுளே கொஞ்சம் இறங்கி வா

பூமிக்கு!!

உயிரோடு இருந்தால் திரும்பி செல்

உன் வீட்டுக்கு!!

உன் நரகத்தை விட கொடியதை

கொஞ்சம் பார்த்து போ!!

இல்லை உன் நரகமும் இதுதானா

கொஞ்சம் சொல்லி போ!!

உன் பதவியை

கொஞ்சம் என்னிடம் விட்டு செல்!!

பணிக்கிறேன் காற்றையும்

அவர்களை தீண்டாமல்

ஆணை இடுகிறேன் நீரையும்

அவர்களால் அருந்தாமல்

சல்லடை கொண்டு சலிக்கிறேன்

இந்த உலகத்தை!!

பாவிகள் அவர்களை

பிரித்து எடுக்கிறேன்!!

அடைக்கிறேன் அவர்களை ஆக்ஸிஜன்

இல்லா காட்டுக்குள்!!

பின் தருகிறேன் இந்த உலகத்தை
உன்னிடம்!!!

என்ன சொல்கிறாய் !!!!
எப்போது வருகிறாய்!!!!

6 comments:

salamsoft said...

Good one :)

Dhanapal K said...

romba nalla irukku abbas... keep going.... all the best

Unknown said...

mmm, good..

Abbasin Kirukkalkal said...

thanks all of u...really it boosts me to write more...thanks once agail

FZ said...

நரகத்தை நீ பார்த்து வந்தாயா?

நீயும் இறைவனும் ஒன்றா?

இறைவனின் சக்தியே கவிதையால் கூட ஒப்பிடாதே !

கவிதை எழுதி இறைவனுக்கு இணை வைக்காதே நண்பா !

முஹம்ம‌து ஆசிக்,
மாயாகுளம்.

Unknown said...

Wonderful thoughts abbas. your words are so powerful.great work