மின்னல் நடை போட்டு
இடி சுதி மீட்டி
பூமியில் கச்சேரியை அரங்கேற்றிடு!!
காண காத்திருக்கும் கண்களை
கொஞ்சம் நனைத்திடு !!
உயிர் கொடுத்திடு!!
விதை பயிர்க்கும்
செடி பூவிற்கும்
பூ வண்டுக்கும்
மரம் கனிக்கும்
எங்கள் உடல் உயிர்க்கும்
சொல்ல நினைக்கும்
காதலை கரை சேர்த்திடு!!!
பூமியை கட்டி அணைத்திடு!!
எங்களை வாழ வைத்திடு!!!
நீ வந்து குதிப்பதற்கு
வாகனம் தேவை இல்லை!!
புவியீர்ப்பு சக்தியில் மிதந்து வருவாய்!!
சுதி சேர்வாய்!!
மேகத்தில் அமர்ந்து
சுற்றி அலைந்து
ரசித்த நேரம் போதும்!!
தாமதித்தால்
எங்கள் மன ஏக்க சக்தியில்
மேகமாக பூமியில் பொத்தென்று
விழபோகிறாய்!!
கனியாமல் இறக்க போகிறாய்!!!
எங்கள் குளங்கள் ஏரிகள்
ஆடையின்றி அசிங்கமாய்
ஆனதை பார்!!!
ஆடை அணிவித்து பார்!!!
எங்கள் மனங்களை குளிர்வித்து பார்!!!
பூக்களையும் கதறி அழ சொல்ல
தெரியவில்லை எங்களுக்கு!!
விவசாயிகளின் குருதி பாய்ந்தோ
ஏழை குடும்பங்களின் கண்ணீர் பாய்ந்தோ
விளைய தெரிய வில்லை எங்கள் பயிர்களுக்கு
நீ வர தவறினால்
வருவதற்கு சஹாரா மட்டுமே
மீதம் இருக்கும்!!!
Sunday, December 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"விவசாயிகளின் குருதி பாய்ந்தோ
ஏழை குடும்பங்களின் கண்ணீர் பாய்ந்தோ
விளைய தெரிய வில்லை எங்கள் பயிர்களுக்கு"
Nice one
சற்று சுதி ஏற்ற வேண்டும் உம் பருவத்திற்கு இல்லாவிட்டால், மழை தவறிய பருவத்திற்கு ஏற்ப பிழை தவறிவிடும் உம் கிறுகல்களில்.
உன் கிறுகல்களுக்கு சற்று நிதானம் தேவை.
Post a Comment