மழை
நான் ஒதுங்கி நின்று ரசிக்க!
கைகொட்டி பூக்கள் எனை அழைக்க!
வேண்டாம் என்று என் மனம் தடுக்க!!
நின்றது மழை...
தனக்கு தலை துவட்ட
பூக்கள் அழைக்க,
நான் ஓடினேன்!!
வேண்டாம் என யாரோ
எனை தடுக்க!!
அது வேறு யாருமல்ல, காற்று!!!
காற்று மெதுவாய் வருட
பூக்கள் தலை அசைக்க!!!
காற்றே நானும் நனைந்து இருக்கிறேன்
ஏன நான் ஏங்க!!
இதோ
பூக்களின் ஆடை அணிவகுப்பு!!
குயில்களின் சரிகமபதநி!!
பட்டாம் பூச்சியின் தகதிமிதா!!
இதோ நான் நடுவராய் குழப்பத்தில்
யார் அழகென்று!!
ஏ பூக்களே!!
பறித்தாலும் சிரிக்கிறாய்!!
தேனிர் குடித்தாலும் சிரிக்கிறாய்!!
இனிக்கிறாய்!!
சுவைக்கிறாய்!!
இந்த வரம்
எந்த கடவுளிடம் இருந்து பெற்றாய் சொல்!!
நானும் மதம் மாற தயாராக!!
Thursday, December 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment