Wednesday, January 28, 2009

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்

பூமியோடு புணர நினைத்து
முடியாமல் சிலிர்த்து
அவிழ்த்த ஆடை இலைகள்!!

இதோ மரம் போல்

நான் என் வெட்கம் அவிழ்த்தேன்
நீ ஒரு போதும் வெட்க்கப்படவில்லை!!

என் நேரம் உனக்காக அவிழ்த்தேன்
உன் நொடியும் என்னிடம் சேரவில்லை!!

என் தூக்கம் அவிழ்த்தேன்
உன் கனவில் ஒரு நொடியேனும் நான் இல்லை!!

என் கண்ணியம் அவிழ்த்தேன்
உன் அறை கூட என் கன்னம் தீண்டவில்லை!!

இனி உயிர் அவிழ்த்தால்
உன் பார்வையாவது என் உடல் தீண்டுமா!!

Sunday, January 25, 2009

PaniPor

பூமியை அணைக்க
துடிக்கும் சூரியனை
வரவிடாமல் பனிப்போர்
நடத்தியது காலை பனி!!

தூரத்தில் பனி
அருகில் சென்று
அணைக்க நினைத்தால்
நழுவி சென்று
தூரமாகும்!!
என்ன கண்ணாமூச்சி ஆட்டமிது
அதிகாலையில்!!

இதோ அங்கங்கு
பனியில் நடந்து இருந்த மனிதர்கள்
கண்ணை கட்டாமல் கண்ணாமூச்சி
ஆடுவதாய் பட்டது!!

சிலந்தி வீடுகள்
பனி துளியில்
விளக்கேற்றி விழா
நடத்தியது!!

இந்த உயிர் சென்று
குத்தும் பனியில்,
காதலியின் 100%
முத்தமும் சூடேற்றுமா
என சந்தேகம் எனக்கு!!

எழும்பும் சதையுமாக
70 கிலோ பிண்டம்
தாங்க முடியவில்லை
குளிரை!!
மில்லிகிராம் பூக்கள்
இதில் சிரித்து மகிழும் அதிசயம்!!

Manidham

புல்லாங்குழலை மூங்கிலல்லாத
இன்னொரு மரத்தில் கட்டி
வைத்து விற்று கொண்டிருந்தான் சிறுவன்

புல்லாங்குழலாய் மாற
வழியில்லை என்றாலும்,
அதை சுமந்து விற்பதற்கு
இன்னொரு மர கம்பு
மாட்டேன் என்று சொல்லாமல்
மகிழ்ந்து குனிந்தது!!

இது மறந்துபோன மனிதத்தை
மரங்கள் மனிதர்களுக்கு
உணர்த்தியாதாக கண்டேன்!!

மனிதர்களே
இயற்கையை உற்று கவனிப்போம்!!
தொலைத்த வாழ்க்கையை
தேடி தேடி தொலைந்திடுவோம்!!

Tuesday, January 20, 2009

My ipod Shuffle(En Kuyil)

ஆப்பிள் வழங்கிய சாதனத்திற்கு
அவன் மெல்லிய உருவம் கண்டு
நான் இட்ட பெயர் குயில்!!!

இந்த குயில் பாட தெரிந்த
ஊமை!!

இவன் ஊமை மொழிகள்
பாடு,
நிறுத்து,
வரிசையை மாற்று,
சத்தத்தை கூட்டு, குறை
இவற்றில் அடங்கும்!!

அலுவலத்தில்
அன்பளிப்பாக கிடைத்தவன்!!
அவனுக்கு அன்பளிப்பாக
எனை ஆக்கி கொண்டான்!!

இதோ இவன் இதழ்களும்
என் செவிகளும் சேர்ந்த நேரம்,
சித்ராவும்,ரெஹ்மானும்
காதருகில் கச்சேரி நடத்தும் நேரம்!!

வைரமுத்து வரிகளின்
ஆழ்ந்த அர்த்தங்களை
அறிய வைத்தவன் இவனே!!

இருவரும் இப்படி சிநேகம்
கொள்வோம் என்று
நினைக்கவில்லை அன்று!!

இவன் இன்றி என் பொழுது
இனிய பொழுது இல்லை!!

இவனின்றி என் தனிமையில்
இனிமை இல்லை!!

Thursday, January 15, 2009

இரவை முழு அர்த்தமாக்கு!!!

இறுக்கம் என்ற சொல்லை
நம் இரவில் செய்து பார்ப்போம்!!
அதை மிஞ்சி விட தினமும்
முயற்சி செய்து பார்ப்போம்!!

அணைப்புக்கு முழு அர்த்தம்
தந்து பார்ப்போம்!!
நம் செல்களெல்லாம் முத்தமிட்டு
சிலிர்க்க செய்து பார்ர்ப்போம்!!

நம் கைகளுக்கு ஓய்வுதனை
இரவெல்லாம் ஒத்தி வைப்போம்!!
நம் வெட்க்கம் எனும் சருகுகளை
காமத்தீயில் போட்டெரிப்போம்!!

நம் பகல் வேலை இந்த யாகத்திற்கு
விரதம் என்று கொள்வோம்!!
இரவெல்லாம் விரதத்தை முடித்து
கொண்டே இருப்போம்!!

வேண்டாம் வேண்டாம்
ஒய்வு வேண்டாம் நம் செல்களுக்கு!!
அவை எல்லாம் முத்தமிட அணைத்து கொள்க !!
அணைப்பு என்ற சொல்லின் அர்த்தம் சேர!!

இந்த இருள் மைதானத்தில்
நாம் விளையாடும் இரு வேறு அணியினர்!!
போட்டியின்றி புதுமை இல்லை
புத்திக்கு சொல்லி கொள்வோம்!!

ஒவ்வொரு இரவிற்கும் ஒரு புதுமை
சொல்லி கொடுப்போம்!!
பழமையிலும் இனிமை உண்டு
கருத்தில் கொள்வோம்!!

என் இதழ் ரேகைகள்
உன் மேனியில் தேய்ந்து இறக்கட்டும்!!
உன் இதழ் ரேகைகள்
என் மேனியின் ரேகைகள் ஆகட்டும்!!

முத்தமென்றால் என்ன என்று
முத்தத்திற்கு சொல்லி கொடுப்போம்!!
முத்தமிட்டு முத்தமிட்டு
உயிர் சாறு மாற்றி கொள்வோம்!!

நாம் முத்த சண்டையில்
பயந்து ஓடிய இருட்டுதான்,
துணைக்கு சூரியனை அழைத்து வந்து
பகல் பொழுதாய் நின்றதடி!!

நம் விரதமும் தொடர்ந்ததடி!!!

Monday, January 12, 2009

Mounam etthanai Alagu!!!

மௌனம் எத்தனை அழகு என்று

வெற்றியை ஒரு துளி கண்ணீரால்
ரசித்தவனக்கு தெரியும்!!

பொங்கிவந்த கோபத்தை ஒரு நொடி மௌனத்தால்
அணை போட்டவனுக்கு தெரியும்!!

பிறந்ததிலிருந்து மௌனமாக சுற்றி கொண்டிருக்கும்
பூமிக்கு தெரியும்!!

சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களுக்கு தெரியும்!!!

கண்களின் மௌன மொழிகளால்
காதலித்தவர்களுக்கு தெரியும்!!

தனிமையில் தன் மன ஓட்டத்தை
ஒரு நிமிடம் ரசித்தவனுக்கு தெரியும்!!

ஏன் இசையை முழுமையாக ரசிக்க கூட
மௌனம் தேவைப்படுகிறது!!

இதை மறந்த மனங்கள் இனியாவது
மௌனத்தை ரசிக்க பழகட்டும்,

அப்போது பரபரப்பான சாலையும்
சத்தமில்லாமல் மௌனமாக ரசிக்க
மனம் விரும்பிடும்!!

Sunday, January 11, 2009

Indian of 2008 :)))

காலையில் அலுவலக தேநீர் வேலை
நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு!!!

இதோ தொலை காட்சி
இந்தியன் 2008 ஐ பட்டியலிட விளம்பரப்படுத்தி
கொண்டிருந்தது!!!

இந்தியாவில் அனைவரும் இந்தியர்களாக இல்லை
என்பதற்கு இன்னொரு சாட்சி!!

அவர்களை தேடி கண்டுபிடித்து பாராட்டும்
அவல நிலை இந்த பாரத தேசத்தில்!!

என்று மாறுமோ இந்த நிலை!!!

Wednesday, January 7, 2009

Payangaravadikalukku Oru Echarikkai!!!!!

பயங்கரவாதிகளே!!

இதோ உங்களுக்கு
ஒரு எச்சரிக்கை!!

எங்கள் மார்பு தாங்கிய
உங்கள் தோட்டக்களால்,
எங்கள் ஒற்றுமை விதைகளை
விதைத்து கொண்டோம்!!!

நாங்கள் விட்ட ஒவ்வொரு உயிரையும்,
தரிசாக கிடந்த எங்கள் சகோதரத்துவத்திற்கு
உரங்களாக்கி கொண்டோம்!!

நாங்கள் சிந்திய ஒவ்வொரு
துளி இரத்தத்தையும்,
ஒற்றுமை புரதம் தடவிய ஒரு லிட்டர்
இரத்தமாக எங்கள் நரம்புகளில்
பாய்ச்சி கொண்டோம்!!!

சாதரண பெண்மணியும்
நான் குண்டேந்தி முன் செல்கிறேன்,
மற்றவர் என்னை பின் தொடருங்கள்
என சொல்ல வைத்ததை,
நீங்கள் நினைவில் கொள்ள செய்தி அனுப்பி
கொண்டோம்!!!

இதோ நீங்கள் நடத்தி சென்ற கொடுமைகளை
ரசிக்க முடியாத உங்கள் மதத்தவர்களை,
எங்கள் ஒற்றுமை மதத்தில்
இணைத்துக்கொண்டோம்!!!

நீங்கள் பறித்து கொள்ளும்
ஒவ்வொரு உயிருக்கும்,
இங்கு இரு நல்ல உயிர்களை
உருவாக்கி கொள்கிறோம்!!

அதற்கு உங்கள் தோட்டாக்களை
அதிகமாக சேகரித்து கொள்ளுங்கள்
முடிந்தால்!!!

Tuesday, January 6, 2009

My point of view on Slum Dog Millonaire

Slum Dog Millionaire

A movie which tells about a story of a guy from a slum,
and how he gets a chance to participate in crorpathi TV program,
and he manages to find the answers by matching the questions with the incidents happened in his life.the coincidence which could never happen
so you can not say this story is a real life story. It is a 100% complete fantasy movie.For the questions which he does not know the answer, he picks the random ones and those are right .))

Really do not know whether the director portrays the life of a slum
or the mafia behind the child beggars
or the real faces of a TV programs...But Nothing is appealing except the portion of a slum life in the first half.

In the beginning, the characters speak in hindi, From the middle of the movie onwards,they start speak in english in sudden
I really could not find the reason behind this. So it makes the characters in the first half to move away from my heart.
and my mind finds it very difficult to fix them and watch along the rest part of the movie.

I have not lost myself in a single scene of this movie.No such scenes are touching and take me to walk along with the characters.

I really have no clue why the foriegners give dollars to the beggars
without thinking of how could a little blind beggar manage to change the currency.

How could a Person who hosts live crorpati program insults a participant
who is chaiwala in a call centre and the crowd watching this laughs along.

But the background music and the songs composed by A.R.Rehman is really appealing.

Sunday, January 4, 2009

Sogathil Nanban

சமீபத்தில் சந்தித்த நண்பன்
சோகத்தை ஒரு வாரமாக
நெருங்கிய நண்பனாக்கிய பரிதாபம்!!!

காரணம்,
அலுவலகம் அவன் அடையாள கயிறை
அறுப்பதற்கு இறுதி நாள் குறித்து விட்டது
இன்னும் ஒரு மாதத்தில்!!

என்னை கேட்டால்
கணினி துறையில் வேலை பார்ப்பதும்
சீட்டு கம்பனியில் பணம் போடுவதும் ஒன்றே
எப்பொழுது விட்டு செல்லும் என தெரியாது!!

இறந்து விடும் தேதி தெரிந்தால் கூட
இறந்த பின் நிம்மதி!!

அனால் இங்கு அப்படி இல்லை!!!
அதன் பின்தான் ஆரம்பமே!!

இதோ அவனை துரத்த
வாங்கிய வங்கி கடன் ஒரு பக்கம்!!
மாதம் வங்கி கணக்கில் விழி வைத்து
காத்திருக்கும் உறவுகள் இன்னொரு பக்கம்!!

இதற்கு கடன் வழங்கிய வங்கியை பழிப்பதா!
இல்லை வாங்க சொல்லிய உறவுகளை பழிப்பதா!
இல்லை விரட்டி விடும் வேலையை பழிப்பதா!

அவன் நம்பிக்கயை எழுப்பி விடும்
சில வார்த்தைகள் மட்டுமே
அவனுக்கு கொடுக்க முடிந்தது!!
அது தேவையும் கூட!!

இதோ அவன் நிலை
எனக்கு எப்போது என என் அறிவிலி
மனது நேரத்தை அளக்கிறது!!

இது உன் சொந்த தொழிலா என்ன
அதை கணித்து சுதாரிப்பதற்கு!!

Thursday, January 1, 2009

ThenMerku Paruva Katru- An another try in my voice

An another not a bad try Thenmerku Paruva Kaatru-- Listen to it nad post ur comments