Wednesday, December 31, 2008

Kaadhal Nayagara from En Swasa Katre - A Try

Hi All, This is Karoake version of Kaadhal Nayagara from En Swasa Katre in my voice- A try Listen to it and post ur comments Thanks in advance

Tuesday, December 30, 2008

Naan Tholaitha Oru varudam

காலம் அளித்த ஒரு வருடம்
வீணாய் தொலைந்து இறக்கிறது!!

பலர்க்கு மன கவலை
வங்கி கணக்கில் சேர்த்தது பற்றி!!
வாங்க தவறிய நகைகள் பற்றி!!
வணங்க தவறிய ஆலயங்கள் பற்றி!!
விற்க தவறிய பங்குகள் பற்றி!!
இறங்கி நிற்கும் பங்கு சந்தை பற்றி!!

இதோ எனக்கு
சிரிக்க தவறிய நேரங்கள் பற்றி!!
மீதமுள்ள அன்பு பற்றி!!
துடைக்க தவறிய கண்ணீர் பற்றி!!
செலவில்லாமல் சேர்ந்து நிற்கும் மூளை பற்றி!!
உதவ தவறிய பணம் பற்றி!!
ரசிக்க தவறிய மலர்கள் பற்றி!!
பழக தவறிய உள்ளங்கள் பற்றி!!
பிரிந்து விட்ட நேசங்கள் பற்றி!!

இவ்வாறாக பட்டியல் இட
அடுத்த வருடமும் முடிந்து விடும்!!
இதில் என்ன குதூகலம்,கொண்டாட்டம்!!

Friday, December 26, 2008

En Devadhai Neeyadi!!!

உன் கூந்தல் தேசம் பற்றிட
பூக்களுக்குள் போரடி!!
அறிக்கை ஒன்றை விட்டு விடடி!!
அந்த போரை நிறுத்திவிடடி!!

அழகி போட்டியில்
உன் கடை கண் காட்டி விடடி!!
போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடடி!!
அழகி அர்த்தத்தை கரை சேர்த்து விடடி!!

குளிர்காற்றும் உன் மேனி பட்டு
அனல் காற்றாய் ஆனதடி!!
என் இதய துடிப்பு ஏறுதடி!!
என் இதய வால்வு வேலை மிகுதியால்
சாகுதடி!!

உன் பச்சை நரம்புகள்
இச்சையுடன் என்னிடம்
ஒளிச்சேர்க்கை செய்ய அனுமதியடி!!
உன் மேனி மலர செய்து
மோட்சம் அடைந்து பாரடி!!

உன் பூ பாதம் தேடி
ஓய்ந்து தேய்ந்த
கடல் அலைகள்,
ஆழி பேரலையாய் தேடி வந்ததடி!!
ஏமாந்து சென்றதடி!!

உன் மேல் விழுந்த மழை துளிகள்
ஆவியாகி விண்மீனாய் மின்னுதடி!!
உன் இதழ் தடவி
நகத்திற்கு சாயம் செய்த வித்தையும்
சொல்லடி!!

என் கவிதை வெள்ளம்
உன் இதயம் நோக்கி பாய்ச்ச
பயம் வந்ததடி!!
உன் பூ இதயம் குலைந்திடுமோ
என் மனமும் குழம்புதடி!!

Thursday, December 25, 2008

Manidan Kadavulin Kulandhaidhaan!!!

மனிதன் ஈன்றெடுத்த
அதிசய குழந்தை கணினி!!!

அதனுடன் பூஜ்ஜியத்திலும் ஒன்றிலும்
பேச திணறிய அவன்
பல மொழிகளையும் தோற்றுவித்தான்!!

பேசி பரவசமும் அடைந்தான்!!

இவ்வாறாக கணினியின்
பல பரிமாற்றங்களில் நானும் பரவசம் அடைந்தேன்!!!

மானிடன் கடவுளையும் மிஞ்சிவிட்டான்
என பெருமிதம் கொண்டேன்!!

இதோ கணினியை நிலை குலைய செய்யும்
வைரசையும் தோற்றுவித்து,

கடவுளை போல் தானும்
தலை குனிந்து நின்றான்!!

கடவுளின் குழந்தை தான் அவன்
என நிரூபித்தான்!!!

மனிதனுடன் நோயையும் படைத்த அவனை போல்!!!

Wednesday, December 24, 2008

Nan Oru Poli Kani Poriyaalan

கணினியுடன் அதன் மொழியில் பேச தெரிந்தால்
நான் கணி பொறியாளன்

தமிழ் தெரிந்தவுடன் பேச தெரிந்தால்
நான் தமிழ் பொறியாளனா என்ன!!

அந்த மொழியை படைத்தவனும் கூட நான் இல்லை!!
அந்த கணினியை படைத்தவனும் கூட நான் இல்லை!!

என்ன ஒரு கேலி கூத்து!!!

இதில் மட்டுமே எளிதாக இந்த பட்டத்தை
பெற்று விட முடியும்!!!

Sunday, December 21, 2008

Paruvam Tavaria Malai

மின்னல் நடை போட்டு
இடி சுதி மீட்டி
பூமியில் கச்சேரியை அரங்கேற்றிடு!!
காண காத்திருக்கும் கண்களை
கொஞ்சம் நனைத்திடு !!
உயிர் கொடுத்திடு!!

விதை பயிர்க்கும்
செடி பூவிற்கும்
பூ வண்டுக்கும்
மரம் கனிக்கும்
எங்கள் உடல் உயிர்க்கும்
சொல்ல நினைக்கும்
காதலை கரை சேர்த்திடு!!!
பூமியை கட்டி அணைத்திடு!!
எங்களை வாழ வைத்திடு!!!


நீ வந்து குதிப்பதற்கு
வாகனம் தேவை இல்லை!!
புவியீர்ப்பு சக்தியில் மிதந்து வருவாய்!!
சுதி சேர்வாய்!!

மேகத்தில் அமர்ந்து
சுற்றி அலைந்து
ரசித்த நேரம் போதும்!!

தாமதித்தால்
எங்கள் மன ஏக்க சக்தியில்
மேகமாக பூமியில் பொத்தென்று
விழபோகிறாய்!!
கனியாமல் இறக்க போகிறாய்!!!

எங்கள் குளங்கள் ஏரிகள்
ஆடையின்றி அசிங்கமாய்
ஆனதை பார்!!!
ஆடை அணிவித்து பார்!!!
எங்கள் மனங்களை குளிர்வித்து பார்!!!

பூக்களையும் கதறி அழ சொல்ல
தெரியவில்லை எங்களுக்கு!!

விவசாயிகளின் குருதி பாய்ந்தோ
ஏழை குடும்பங்களின் கண்ணீர் பாய்ந்தோ
விளைய தெரிய வில்லை எங்கள் பயிர்களுக்கு

நீ வர தவறினால்
வருவதற்கு சஹாரா மட்டுமே
மீதம் இருக்கும்!!!

Saturday, December 20, 2008

Nee enge

என் காதலியே கண் முன் வா
நீ பிறந்திருந்தால்

என் மனக் காதல் அணைக்கட்டு
உடைந்து உன் உயிரில் பாய்வது எப்போ!!!

என் காதல் சஹாரா சிரபுஞ்சியாய்
மாறுவது எப்போ !!!

என் இரு உள்ளம்கைகள் உரசி அழிந்த ரேகைகள்
உன் உள்ளங்கையுடன் உரசி உயிர்த்தெழுவது எப்போ!!

என் பணப்பையில் மணித்துளிகள்
கணக்கின்றி உனக்காக இறக்க செய்யும் தவம்
நிறைவடைவது எப்போ!!

என் வாகன பெட்ரோல் துளிகள்
உன்னை ஏற்றி பயணம் செய்து
பிறவி பயன் அடைவது எப்போ!!!

ஒரு வார வாழ் நாளில் என் முக ரோமங்கள்
ஒரு முறை ஏனும் உன் கன்னம் தீண்டி இறப்பதெப்போ!!!

பெங்களூர் பூங்காக்களின்
என் தனிமை கொடுமை நேரங்கள்
இனிமை ஆவது எப்போ!!!

ஊடல் கொண்ட பொழுதுகளில்
நிலவும் தென்றலும்
எனக்காக தூது செல்வது எப்போ!!

காதல் வயப்பட்டு திருமணம் எனும்
அங்கீகாரம் கிடைப்பது எப்போ!!

என் கனவு திரை அரங்குகளில்
நம் காதல் திரைபடங்கள்
வெற்றி விழா காண்பது எப்போ!!!

திருமண முன் பருவமாம் நிச்சயம்
என் வாழ்வில் வராமல் இறக்க
நீ வருவது எப்போ!!

என் காதல் சோலை பூக்கள்
உன் மன கூந்தல் ஏறி
மோட்சம் அடைவது எப்போ!!!

என் காதல் அண்டார்டிகா
உருகி ஓடி உன் மடி சேர்வது எப்போ!!

என் காதல் கவிதை
பலர் மனம் தீண்டி இறப்பதை விட
உன் மனக் காதல் உராய்ந்து உயிர்ப்பித்து
இறப்பெதேப்போ!!!

இந்த கவிதைக்கு முற்று புள்ளி
வைக்க நேரும் நிமிடம் வருவெதேப்போ!!!