நான் அழுத துளிக்கு மட்டும்
என் மனம் தெரியும்
எனக்காக விழுவதற்கு
எப்பொழுதும் நீ இருக்கிறாய்
கண்ணீர் நீ என் கவலையை கரைக்கும்
பன்னீர்
உன் ஒரு துளியில் என் ஓராயிரம்
கவலைகள் ஆவியாகிறது
என் மனம் பூவாகிறது
என் உயிரில் நீ மட்டும் வற்றி விடாதே
என்னை தனியே விட்டு விடாதே
Monday, March 16, 2009
En Manam
நன்மை செய்வதற்கு
நொடியும் சிந்திக்காத
என் மனம்,
சில சமயங்களில்
தீங்கிற்கும் அப்படியே
நடந்து விடுகிறது
ஆயிரம் தீமைகளை
ஒரு நன்மைக்கு மறைக்கும் சக்தி உண்டென்றால்
ஒரு தீங்கிற்கு செய்த நன்மைகளை
குழி தோண்டி புதைக்கும் சக்தி இருப்பதில் வியப்பில்லை
என மனம் அடிக்கடி படிக்க வேண்டிய கவிதை
நொடியும் சிந்திக்காத
என் மனம்,
சில சமயங்களில்
தீங்கிற்கும் அப்படியே
நடந்து விடுகிறது
ஆயிரம் தீமைகளை
ஒரு நன்மைக்கு மறைக்கும் சக்தி உண்டென்றால்
ஒரு தீங்கிற்கு செய்த நன்மைகளை
குழி தோண்டி புதைக்கும் சக்தி இருப்பதில் வியப்பில்லை
என மனம் அடிக்கடி படிக்க வேண்டிய கவிதை
Friday, March 6, 2009
அலுவலகத்தில் Dumb Charades
அலுவலகத்தில்
dumb charades
அதில் "மும்பை மேரி ஜான்"
திரைப்படத்தை ஊமை மொழியில்
நடித்து காட்ட வேண்டும்
இதோ நடித்தவர் கைய்யால் வரைந்த
இந்திய வரைபடத்தில்
துப்பாக்கி சூடு நடத்தி காட்ட
அடுத்த நொடியில் படம் ஊகிக்கப்பட்டது
இன்னும் சில காலங்களில் இது போல்
துப்பாக்கி சூடு எங்கும் காணும் பட்சத்தில்
எவ்வாறு இந்த படம் நடித்து காட்ட படுமோ!!
இதில் ரசித்தது
அந்த படமும் மும்பையில் நடந்த
குண்டு வெடிப்பு பற்றியது
இதோ என் ஞாபக மறதியையும் மீறி
நினைவுக்கு வந்த தினங்கள்
9/11 - அமெரிக்கா
7/7 - லண்டன்
27/12 - பாகிஸ்தான் பெனஜிர்
25/7 - பெங்களூர்
26/7 - (அகமதாபாத்-டெல்லி)
26/11 - மும்பை
3/3 - பாகிஸ்தான்
மனங்கள் இல்லா மனிதர்கள்
தினங்களுக்கு இரத்த திலகமிடுகிறார்கள்
பிணங்களால் மண்ணிற்கு உரமிடுகிறார்கள்
புரியவில்லை
என்ன வேண்டும் என்று இந்த
மா மனிதர்களுக்கு!!
dumb charades
அதில் "மும்பை மேரி ஜான்"
திரைப்படத்தை ஊமை மொழியில்
நடித்து காட்ட வேண்டும்
இதோ நடித்தவர் கைய்யால் வரைந்த
இந்திய வரைபடத்தில்
துப்பாக்கி சூடு நடத்தி காட்ட
அடுத்த நொடியில் படம் ஊகிக்கப்பட்டது
இன்னும் சில காலங்களில் இது போல்
துப்பாக்கி சூடு எங்கும் காணும் பட்சத்தில்
எவ்வாறு இந்த படம் நடித்து காட்ட படுமோ!!
இதில் ரசித்தது
அந்த படமும் மும்பையில் நடந்த
குண்டு வெடிப்பு பற்றியது
இதோ என் ஞாபக மறதியையும் மீறி
நினைவுக்கு வந்த தினங்கள்
9/11 - அமெரிக்கா
7/7 - லண்டன்
27/12 - பாகிஸ்தான் பெனஜிர்
25/7 - பெங்களூர்
26/7 - (அகமதாபாத்-டெல்லி)
26/11 - மும்பை
3/3 - பாகிஸ்தான்
மனங்கள் இல்லா மனிதர்கள்
தினங்களுக்கு இரத்த திலகமிடுகிறார்கள்
பிணங்களால் மண்ணிற்கு உரமிடுகிறார்கள்
புரியவில்லை
என்ன வேண்டும் என்று இந்த
மா மனிதர்களுக்கு!!
Thursday, February 26, 2009
Kadavul
கண்கள் இல்லை உனக்கு
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்
பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்
வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்
இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்
இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்
இந்த பூமி சொர்க்கமாகட்டும்
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்
பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்
வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்
இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்
இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்
இந்த பூமி சொர்க்கமாகட்டும்
என் தங்கை
அன்போடு என்னை அடிப்பவள்
அருகில் அமர்ந்து படித்தவள்
தேர்வு பொழுதுகளில்
அவளுக்கு நான் அலாரம்
எனக்கு அவள் அலாரம்
அன்னை பகிர்ந்து அளித்ததை
எனக்கு பகிர்ந்து கொடுத்தவள்
என்னை விட என் கல்வியில்
நம்பிக்கை வைத்தவள்
என்னை விட கல்வியை
நன்று கற்று கொண்டிருந்தவள் கூட
தொடர்ந்திருந்தால் ஆகி இருப்பாள்
மருத்தவராக, பொறியாளராக
இன்று மகளுக்கு
பாடம் சொல்லி கொடுத்திருக்கும் அன்னை
பறக்க நினைக்கையில்
தங்க தாலியால் அவள் சிறகு கட்டி
கூண்டிலும் அடைத்தது இந்த சமூகம்
பூபோல் சிரித்திருப்பாள்
புன்னகையில் பதிலளிப்பாள்
சில நேரம் கண்ணீரிலும்
புத்தகத்தில் புதைந்திருப்பாள்
இன்று எப்போதாவது புன்னகைகிறாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
பொறுப்புகளை சுமக்கிறாள்
பூமி மாற்றமடைய
பல ஆயிரம் ஆண்டுகள்
இந்த பூவில்
இத்தனை மாற்றங்கள்
ஆச்சரியம்!!
அருகில் அமர்ந்து படித்தவள்
தேர்வு பொழுதுகளில்
அவளுக்கு நான் அலாரம்
எனக்கு அவள் அலாரம்
அன்னை பகிர்ந்து அளித்ததை
எனக்கு பகிர்ந்து கொடுத்தவள்
என்னை விட என் கல்வியில்
நம்பிக்கை வைத்தவள்
என்னை விட கல்வியை
நன்று கற்று கொண்டிருந்தவள் கூட
தொடர்ந்திருந்தால் ஆகி இருப்பாள்
மருத்தவராக, பொறியாளராக
இன்று மகளுக்கு
பாடம் சொல்லி கொடுத்திருக்கும் அன்னை
பறக்க நினைக்கையில்
தங்க தாலியால் அவள் சிறகு கட்டி
கூண்டிலும் அடைத்தது இந்த சமூகம்
பூபோல் சிரித்திருப்பாள்
புன்னகையில் பதிலளிப்பாள்
சில நேரம் கண்ணீரிலும்
புத்தகத்தில் புதைந்திருப்பாள்
இன்று எப்போதாவது புன்னகைகிறாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
பொறுப்புகளை சுமக்கிறாள்
பூமி மாற்றமடைய
பல ஆயிரம் ஆண்டுகள்
இந்த பூவில்
இத்தனை மாற்றங்கள்
ஆச்சரியம்!!
Saturday, February 7, 2009
Pillaikalum Pallikalum
பெற்றோர்களே
ஒழுக்கங்களை வாழ்க்கையிலிருந்து
சொல்லிகொடுங்கள் பிள்ளைகளுக்கு!!
மதங்களில் இருந்து மட்டும் சொல்லப்படும்
ஒழுக்கங்கள் மதங்களில் மட்டும் வாழ்கிறது!!
மனங்களில் இருந்து தேய்கிறது!!
தேச பற்று
ஜன கன மன விழும்
தேசியக்கொடி வணக்கத்திலும்
சுதந்திர தின விழாவில் மட்டுமே சொல்லபடுவதால்
தேசத்தில் நேசமும் இல்லை
பற்றுதலும் இல்லை
குழந்தைகள் பூக்கள்
அதில் ஆசிரியர்கள் தேன் எடுக்கட்டும்
இரத்தத்தை அல்ல
போர்க்கு செல்லும்
கோழையில் முகத்தில் கூட புன்னகை!!
பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் இல்லை!!
எழுதுகோலை கூர்மையாக்க தெரிந்த பிள்ளைகளுக்கு
அறிவை கூர்மையாக்க சொல்லப்படுவதில்லை!!
அறிவியல் அறிவு இல்லாத இயலாக
தமிழ் தேர்வில் தேறும் அளவுக்கு
வரலாறு வருடங்கள் நினைவு கூற
கணக்கு தேர்வில் 100 எடுப்பது எப்படி
என கற்பிக்கபடுவதால்,
அனைத்தும் இறக்கிறது!!
சிந்திப்பதை சிதைக்கிறது!!
எழுதி எழுதி
விரலில் காய்த்தது போல்
மூளையும் காய்த்து விட்டதுதான் மிச்சம்!!
புத்தக மூட்டையுடன்
பிள்ளைகளை பள்ளி சேர்க்கும்
தாய்மார்கள் பார்க்கையில்
பள்ளிகள் அவர்களுக்கா
இல்லை குழந்தைக்கா
என சந்தேகம் எழுப்பும்!!
அந்த சிறிய மூளைக்குள்
இவ்வளவும் திணிக்கப்பட்டு இறக்கிறது!!
பள்ளிகளே
எழுதவும் படிக்கவும்,கூடவே
சிந்திக்கவும் தூண்டிவிடுங்கள் !!
இனி IIT கள் அதிகமாகட்டும் இந்தியாவில்!!
ஒழுக்கங்களை வாழ்க்கையிலிருந்து
சொல்லிகொடுங்கள் பிள்ளைகளுக்கு!!
மதங்களில் இருந்து மட்டும் சொல்லப்படும்
ஒழுக்கங்கள் மதங்களில் மட்டும் வாழ்கிறது!!
மனங்களில் இருந்து தேய்கிறது!!
தேச பற்று
ஜன கன மன விழும்
தேசியக்கொடி வணக்கத்திலும்
சுதந்திர தின விழாவில் மட்டுமே சொல்லபடுவதால்
தேசத்தில் நேசமும் இல்லை
பற்றுதலும் இல்லை
குழந்தைகள் பூக்கள்
அதில் ஆசிரியர்கள் தேன் எடுக்கட்டும்
இரத்தத்தை அல்ல
போர்க்கு செல்லும்
கோழையில் முகத்தில் கூட புன்னகை!!
பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் இல்லை!!
எழுதுகோலை கூர்மையாக்க தெரிந்த பிள்ளைகளுக்கு
அறிவை கூர்மையாக்க சொல்லப்படுவதில்லை!!
அறிவியல் அறிவு இல்லாத இயலாக
தமிழ் தேர்வில் தேறும் அளவுக்கு
வரலாறு வருடங்கள் நினைவு கூற
கணக்கு தேர்வில் 100 எடுப்பது எப்படி
என கற்பிக்கபடுவதால்,
அனைத்தும் இறக்கிறது!!
சிந்திப்பதை சிதைக்கிறது!!
எழுதி எழுதி
விரலில் காய்த்தது போல்
மூளையும் காய்த்து விட்டதுதான் மிச்சம்!!
புத்தக மூட்டையுடன்
பிள்ளைகளை பள்ளி சேர்க்கும்
தாய்மார்கள் பார்க்கையில்
பள்ளிகள் அவர்களுக்கா
இல்லை குழந்தைக்கா
என சந்தேகம் எழுப்பும்!!
அந்த சிறிய மூளைக்குள்
இவ்வளவும் திணிக்கப்பட்டு இறக்கிறது!!
பள்ளிகளே
எழுதவும் படிக்கவும்,கூடவே
சிந்திக்கவும் தூண்டிவிடுங்கள் !!
இனி IIT கள் அதிகமாகட்டும் இந்தியாவில்!!
Thursday, February 5, 2009
Manangal Valigal Palagattum
நம் மனங்கள் வலிகள் மறந்தன!!
கண்கள் கண்ணீர் மறந்தன!!
உயிர்கள் துடிப்பது மறந்தன!!
பூ மோதினால் பூகம்பம் என்ற நிலை!!
நம் உயிர்கள் AC யில்
இருந்து வாழ பழகி விட்டது!!
கடைசியாக வலித்தது
அலுவலத்தில் சக ஊழியர் மோதியது!!
இறுதியாக அழுதது
காய்ச்சலுக்காக மருத்துவர் ஊசி இட்டது!!
இறுதியாக இழந்தது
சம்பள உயர்வில் எதிர் பார்த்தது குறைந்தது!!
இதோ இலங்கை எனும் தேசம்,
நிலாவில் இருந்து பார்த்தால்
இரத்த கரையுடன் ஒரு புள்ளி,
பூமிக்கு இட்ட திலகம் போன்று!!
இங்கு வாழ்க்கை தொலைப்பதற்கு!!
நொடிகள் உயிர்களை பிடித்து கொள்ள!!
இரத்தங்கள் கண்ணீராக!!
கண்ணீர் வற்றியவயாக!!
மரணங்கள் ஒரே விசேஷங்களாக!!
ஓலங்கள் ஓசையாக!!
மண்டை ஓடு விளையாடும் பந்துகளாக!!
கோவில்கள் ஒழிந்து கொள்வதற்காக!!
உயிரை பிடித்துக்கொல்வதே வேலையாக!!
நேற்று காதலர்கள்
இன்று அவர்கள் காதல் மட்டும்!!
நேற்று நேசித்தவர்கள்
இன்று அவர்கள் நேசங்கள் மட்டும்!!
இனியாவது நமது உயிர் வலிகளுக்கு
பழகட்டும்!!
வலிகளை உணர பழகட்டும்!!
கண்கள் கண்ணீர் மறந்தன!!
உயிர்கள் துடிப்பது மறந்தன!!
பூ மோதினால் பூகம்பம் என்ற நிலை!!
நம் உயிர்கள் AC யில்
இருந்து வாழ பழகி விட்டது!!
கடைசியாக வலித்தது
அலுவலத்தில் சக ஊழியர் மோதியது!!
இறுதியாக அழுதது
காய்ச்சலுக்காக மருத்துவர் ஊசி இட்டது!!
இறுதியாக இழந்தது
சம்பள உயர்வில் எதிர் பார்த்தது குறைந்தது!!
இதோ இலங்கை எனும் தேசம்,
நிலாவில் இருந்து பார்த்தால்
இரத்த கரையுடன் ஒரு புள்ளி,
பூமிக்கு இட்ட திலகம் போன்று!!
இங்கு வாழ்க்கை தொலைப்பதற்கு!!
நொடிகள் உயிர்களை பிடித்து கொள்ள!!
இரத்தங்கள் கண்ணீராக!!
கண்ணீர் வற்றியவயாக!!
மரணங்கள் ஒரே விசேஷங்களாக!!
ஓலங்கள் ஓசையாக!!
மண்டை ஓடு விளையாடும் பந்துகளாக!!
கோவில்கள் ஒழிந்து கொள்வதற்காக!!
உயிரை பிடித்துக்கொல்வதே வேலையாக!!
நேற்று காதலர்கள்
இன்று அவர்கள் காதல் மட்டும்!!
நேற்று நேசித்தவர்கள்
இன்று அவர்கள் நேசங்கள் மட்டும்!!
இனியாவது நமது உயிர் வலிகளுக்கு
பழகட்டும்!!
வலிகளை உணர பழகட்டும்!!
Subscribe to:
Posts (Atom)