Wednesday, July 1, 2009

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 3

குறிப்பு:கீழ் உள்ள பாகம் 1,2 ஐ படித்து விட்டு தொடரவும்

மலையிலிருந்து விளக்குகள் மிளிரும் ஊரை ரசிப்பது ஒரு சுகம்தான். அப்போ தூங்கிட்டு இருக்க ஊரை பாத்து வெட்டி பயலுக தூங்குரானுங்கனு தோணிச்சு.

ஏனோ வானுக்கும் பூமிக்கும் ஒரு இடைவெளி இல்லாமல் ஒரு இருட்டு கடலுக்குள் இருப்பதாகவே உணர்ந்தோம். காரணம் நட்சத்திரமும் லீவு போட்டிருந்தன, நிலவும் கூட யாரோட காதலுக்கோ தூது போயிடுச்சு. அப்படி ஒரு கருமையான இரவு.

இதோ எங்கள் படைகள் சிகரம் நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருந்தது. அந்த மலை பாதைதான் எவ்வளவு கல்லும் முரடுமாக, ஆனால் இந்த மானிட மனங்களுக்கிடையே காலம் தள்ளுவதை காட்டிலும் எளிமையாகவே இருந்தது. அதில் கைடு கையில் டார்ச்சுமின்ரி, காலில் சாதாரண செருப்புடன் மின்னல் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார். அவருக்கு கொஞ்சம் ஈடு கொடுத்தது நானும் ரங்காவும் மட்டுமே. உள்ள ஒரே ரணகளம்தான், வலிய வெளிய காட்டிகாம எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது. மற்ற வீரர்களுக்கு அங்கங்கு ஹால்டிங்கும்,கூடவே குளுகோசும்(ஆற்றல் ஊட்டி) தேவைப்பட்டதால், நடிப்பதில் எனக்கும் ரங்காவிற்கும் சிரமம் ஏதும் இல்லை. விக்ரமிற்கு ஆற்றல் ஊட்டி அவ்வப்போது கொடுக்கப்பட்டு உயிரூட்டப்பட்டார் பாவம். இது எதுவுமின்றி 50 பிராயத்தை கடந்த கைடு ஆச்சரியப்படுத்தினார். ஹி இஸ் த மேன்! எனக்கு தெரிந்த கன்னட பாசையில் கைடுடன் உரையாடி அவரை பற்றி தெரிந்து கொண்டது, அவர் இந்த மாறி படைகளை சொரிந்து பணம் பார்ப்பதோடு, கூடவே காய்கரி வியாபாரமும் செய்வதாக கூறினார்.

இதோ சூரியன் மலையுடன் இரவெல்லாம் ஒரே கரும் போர்வையில் புணர்ந்து விட்டு, மெல்ல வெட்கத்துடன் விழித்து பார்த்தான். நேரம் அதிகாலை 5.45 யை தொட்டிருக்கும். நாங்கள் புணர்ந்ததை டார்ச் அடித்து பார்த்து விட்டோம் என்ற வெட்கத்திலோ என்னவோ முகத்தை முழுதாய் எங்களுக்கு ஆதவன் காட்டவே இல்லை. இப்போ புரிந்தது மலை எப்புடி குட்டி போடுதுன்னு.

இதோ நாங்கள் சிகரத்தில். நாங்கள் இருந்த மலையின் அழகும் , உயரமும் பார்த்து ஆச்சர்யபட்டோம். இவ்வளவு தூரம் உயிரோடு வந்து விட்டோம். கைடுக்கு நன்றி. தளபதிக்கு நன்றி. குளுக்கோசிர்க்கு மிக்க நன்றி. ஆனால் கைடோ பேசிய தொகையை பெற்று கொண்டு உறவை துண்டித்து கொண்டான்.

மலை உச்சியில் அவரவர் வேண்டுதலை உரக்க வானுக்கு கத்தி கொண்டிருக்க,
விக்ரம் I am king of the world என்று கத்த, எனக்கு He is the KingKOng of the world என்று ஒலிப்பது போல் இருந்தது.

சிகரத்தில் நாங்கள் மட்டும்தான் என்று எண்ணி நுழையும் போதே பார்த்தால், ஒரு திருவிழா கூட்டம் டென்ட் போட்டு தங்கி இருந்தது. ஏதோ விடிந்தது பிடிக்காதது போல்,முடிந்தது அவர்கள் வேலை என்பது போல் கிளம்பி சென்று விட்டனர்.முன்னிரவே வந்து அவர்கள் தங்கி பலானதை பண்ணி இருக்க கூடும் என்று ஊகிக்க முடிந்தது. எங்களை தடுத்த காவலாளியின் திருட்டுத்தனமும் வெளுத்தது. இந்த போலிஷ்காரங்களே போலிதான் எஜமான்.

நடேசும் ரங்காவும் ஏதோ P.C.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்து போட்டோ எடுத்தாங்க. இந்த பொருமல் வேற ஒன்னும் இல்ல, வேற யார்கிட்டையும் கேமரா இல்ல.

மலையில் சுற்றி திரிந்த மேகம் உடலுக்குள் ஊடுருவி கிச்சு கிச்சு மூட்டியது. அதை முழுதாக அனுபவிக்க எண்ணி என் கவசத்தையும்(ஜெர்கின்) கழட்டி எரிந்து சுற்றினேன். என்னால் எத்தனை மேகங்களை முத்தமிட்டு அணைக்க முடியுமோ அத்தனையையும் அணைத்து கொண்டேன்.

இந்த பழங்கால புலிகேசிகள், பயந்து ஒளிந்து கொள்ள ஒரு மலை
உச்சியில் ஒரு மண்டபத்தை கட்டி விட்டு கூடவே ஒரு கோவிலையும் கட்டி விடுவார்கள். கேட்டால் கோவிலுக்காகதான் இந்த மலை உச்சி வந்ததாக சந்ததி நினைத்து கொள்ளட்டும் என நம்ப செய்ய. என்ன கள்ள தனம். வழக்கம் போல் இந்த மலை உச்சியும் ஏதோ புலிகேசியின் புகலிடமாக இருந்திருக்கு. அந்த மண்டபத்தில் இரு நாய்கள் உல்லாசமாக இப்போது வசித்து வருகின்றன. புலிகேசிகளின் வாரிசுகள்.
மண்டபதிற்கு அருகில் நெருப்பு மூட்டி இருந்தது. இதோ ஓசியில் குளிர் காய பயணப்பட்டு விட்டோம் மொத்த படையும்.

ஸ்ரீராம், பெயரிற்கு ஏற்ற முகம். அமைதி கலந்த வசீகரமான புன்னகை எட்டி பாத்து கொண்டே இருக்கும். இந்த ராமனுக்கு கொஞ்சம் தாடி, ஒரு வெள்ளை அங்கி எல்லாம் இட்டு பார்த்ததில், ஜீசஸ் கிறிஸ்ட் போலவே இருந்தார். இந்த ஜீசஸ் ராம், கொஞ்சம் அதிகமாகவே அசர்ந்தார். அசந்து குளிர் காய்ந்த இடத்தில் மட்டையானார். விட்டிருந்தால் கரி கட்டையாகி இருப்பார். நான் அவரை சுய நினைவுக்கு திருப்பி மேல் படர்ந்திருந்த சாம்பலையும் துடைத்து , ஜீசஸ் ராமிடம் இருந்து புண்ணியம் தேடி கொண்டேன்.

மீண்டும் தளபதி தலை மறைவு. நானும் நடேசும் தளபதியை தேடி கூக்குரலிட்டோம். தளபதி எந்த புதரில் இருந்தாலும் முடிப்பதை முடித்து விட்டு வந்து சேரவும் என்னும் சத்தம் மலை முழுவதும் ஒலிக்க செய்தோம். வழக்கம் போல் தளபதி காமெடியை அரங்கேற்றி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு குன்றின் மேல் நல்லவர் போல். நடேஷ் அவர் அருகில் நெருங்கும் போதே, நடேஷிடம் முன் ஜாக்கிரதையாக நீ பக்கத்தில் வரும் போதே கப்படிக்குதுனு அட்வான்சா தளபதி எடுத்து விட்டு அவரே அவரை வாரி கொண்டார்.

மற்ற நண்பர்களும் இணைந்தனர். கீழ் நோக்கி புறப்பட படை தயாரானோம். எங்களுக்கு வழிகாட்டியாக மண்டபத்தில் இருந்த நாய் இணைந்து கொண்டது. வெற்றியுடன் போர் முடிந்து திரும்பினோம்.

நீங்க கற்பனை செய்த நிகழ்வுகளை இந்த புகை படங்களுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளவும்.

நடேஷ் ஆல்பம்

ரங்கா ஆல்பம்

6 comments:

Noorul said...

விக்ரம் I am king of the world என்று கத்த, எனக்கு He is the KingKOng of the world என்று ஒலிப்பது போல் இருந்தது.

- Oru law college student ye, ippadi neenga asinga paduthi irukka kodaadhu..Ana enakku idhu dhan romba pudichchu irukku..

sparamas said...

Super punch !!!! விக்ரம் I am king of the world என்று கத்த, எனக்கு He is the KingKOng of the world என்று ஒலிப்பது போல் இருந்தது.

Abbas, appadiye naadodigal padam paakum bodhu neenga thoongina nigalvugalayum padhivu pannidunga..

sparamas said...

"விக்ரமிற்கு ஆற்றல் ஊட்டி அவ்வப்போது கொடுக்கப்பட்டு உயிரூட்டப்பட்டார் பாவம்."

Vikaram.. Ippo theriyudha neenga yen setha ponam maadhiri ranga camera photos la irundheengannu..

Abbasin Kirukkalkal said...

அடுத்த நாள் கூத்தையும் எழுதலாம்னுதான்
பாத்தேன் ரெம்ப மெகா தொடர் மாறி போய்ட்டு இருந்த பீலிங்
அதான் முற்று புள்ளி வச்சுட்டேன்

Noorul said...

engalukku idhu seekiram mudincha maadhiri dhaan irukku.. innum koncham neelamaa yezhudhunga..

Innum unga kitta irundhu nirayaa yedhir paakrom..

Eswari said...

//நிலவும் கூட யாரோட காதலுக்கோ தூது போயிடுச்சு//

//இதோ சூரியன் மலையுடன் இரவெல்லாம் ஒரே கரும் போர்வையில் புணர்ந்து விட்டு, மெல்ல வெட்கத்துடன் விழித்து பார்த்தான்//

//என்னால் எத்தனை மேகங்களை முத்தமிட்டு அணைக்க முடியுமோ அத்தனையையும் அணைத்து கொண்டேன்//

அழகான கவிதைகள்