Wednesday, July 1, 2009

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 2

இவன் இப்படி நடு நிசியில் மலையை மூன்னுறிற்கு ஏலம் விடுகிறானே இது முதல்ல அந்த மலைக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தொடர்ந்து "அய் யார ஏமாத்த பாக்குற முதல்ல இங்க மலை இருக்கானு லைட் அடிச்சு காமி அப்புறம் மூன்னுறு தருகிறோம என்று கூற வேண்டும் போல் இருந்தது.

காவலர்கள் என்ற பெயரில் ராபிச்சை எடுத்துகொண்டிருகும் அவனிடம் மேலும் வாதிட பயன் ஏதுமின்றி குதிரைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அப்பொழுதுதான் புரிந்தது எந்த குருட்டு தைரியத்தில் மலைக்கு ஆள் துணை ஏதுமின்றி நடு இரவில் செல்வது என்பதை யோசிக்காமலே பேரம் பேசிகொண்டிருந்தோம் என்று உணர்ந்தோம்.கொஞ்ச நேரத்தில் எங்க டைம் காமெடி டைம் ஆயிருக்கும் இப்படி மூன்னுறையும் கொடுத்து நடுஇரவில் நட்டாத்தில் விட்டது போல். நடப்பது நன்மைக்கே என்று இடத்தை விட்டு காலி செய்தோம்.

அவ்வபோது வெறுப்பில் தளபதி என்னால்தான் காரியம் கேட்டது போல் என்னை திட்டியதுதான் வருத்ததிற்குரியது, அவர் செய்த நாற்பது ரூபாய் காமெடியை அறவே மறந்து.
திரும்பிய வழியில் இன்னொரு சொறிபடை வந்ததை அறிந்து நிகழ்ந்ததை கூறி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அது கன்னட படை. அந்த காவலாளிகள் என்ற போர்வையில் இருந்த ராப்பிச்சை காரனை கரெக்ட் பண்ணவும் வசதியா இருக்கும் என அவர்களுடன் நானே முன்வந்து பேசினேன். அப்படியே காவிரி பிரச்சனையையும் ஒரு பிட் போட்டு முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணமும் இருந்தது.

இதோ எதிர்பாராத சம்பவம்.

ஒரு எதிர்பாராத சம்பவம் இன்னொரு எதிர்பாராத சம்பவத்தால் சரி செய்ய படுகிறது.
டூரிஸ்ட் கைடு என்ற பெயரில் குரங்கு தொப்பி போட்ட ஒருவர் எங்கு இருந்து குதித்து வந்தார் என்று யோசிப்பதற்குள், வந்து தளபதியுடன், மலைக்கு குறுக்கு வழியில் அழைத்து செல்வதாக பேரம் பேச தொடங்கி விட்டார். இவர் மரத்தில் ஒளிந்து இருந்து ஏமாந்து வரும் படைகளை எல்லாம் வழி மறித்து சொரிந்து விடும் புண்ணிய தொழில் செய்கிறவர் போல. அவர் குதிரைகளை மலை அடிவாரத்தில் கட்டி பார்க் செய்வதற்கும் ஏற்ப்பாடு செய்து தருவதாக கூறினார். இத்தனையும் அதே மூன்னுறில் . இந்த டீலிங் அந்த நேரத்தில் எங்களுக்கு ரெம்ப பிடிச்சு இருந்தது. மேலும் நம்முடன் அந்த கன்னட படையையும் சொரிந்து கொண்டால் மூன்னுறு பாதியகுமே என்ற அற்ப ஆசை வேறு.

என்ன செய்வது அந்த சொறி படை எங்களை வெறுப்படைய செய்தார்கள் வேறு திட்டத்துடன். என்ன செய்வது பேசியதில் இரு படைகளுக்கும் சொறிவதற்கு உடன்பாடு ஏற்ப்படவில்லை. எங்க தளபதியையும் படையின் பலத்தையும் பார்த்து கொஞ்சம் நடுங்கியது போல் தோன்றியது. தளபதியின் ஆணை படி மூன்னுறு கொடுத்து கைடுடன் தனியாகவே சொரிந்து கொள்ளலாம் எனும் முடிவு ஒரு மனதாக அமலானது.

இதோ குதிரைகளை கைடு காட்டிய இடத்தில கட்டி ஓய்வெடுக்க வைத்து விட்டு, கிளப்புங்கள் என்று உற்சாகத்துடன் டார்ச்சையும் ஆன் செய்து கிளம்பி விட்டோம் சிகரத்தை நோக்கி. சிகரம் அடிவாரத்திலிருந்து சுமார் 5 KM தொலைவில் உள்ளது என்று கைடு கூற ,நாங்க கொஞ்சம் ஜெர்காயி பயந்தோம். இருந்தாலும் தளபதி தந்த உற்சாகத்தால் அது மறைந்தது.

இந்த சீன்ல கவுண்டமணி தலையில் டார்ச் வைத்து கொண்டு செய்யும் காமெடியே நினைவுக்கு வந்தது. அந்த மாறி இப்ப இன்னொரு காமெடி சீன் இருக்கு. அடிவாரத்தை கூட தாண்டவில்லை அதற்குள் அடிவயிற்றை கலக்கி விட்டது அருணுக்கு. இதே சீன் தளபதியை வைத்து அரங்கேறி இருந்ததால் சக வீரர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருட்டிலே வயலுக்கு ஒரு வழியாக அருண் உரம் போட்டு மற்ற படி முடித்து விட தொடர்ந்தோம். இதில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கைடு எங்களை அவசரபடுத்தி கொண்டிருந்தது காமெடி.

மலை இருளில் கரிய நிற ஆடை அணிந்து உறங்கி கொண்டிருந்ததால் ,முழுதாக அது மலைதான் என்று உணரவும் முடியவில்லை. ஏதோ கைடு காட்டும் பாதயை தொடர்ந்தே சென்றோம். டார்ச்சை வைத்து கொண்டு மழையின் கூந்தலை பேன் பார்த்து கொண்டே ஏறுவது போல்.
மலையில்தான் எத்தனை சின்ன சின்ன குன்றுகள். மலை எவ்வாறு இத்தனை குட்டி போட்டது என்று ஊகிக்க முடியவில்லை. இன்னும் குட்டி போட்டு கொண்டுதான் இருக்கானு மனசுல ஒரு கேள்வி வேற.

முதலில் மலையில் சந்தித்த ஜீவன் ஒரு பூரான் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தது. எப்படி இந்த மலைக்கு வந்திருக்கும். எத்தனை நாள் ஆகி இருக்கும் என்று யோசிக்கும் போதே மற்றவர்கள் கடந்து தூரமாக, ஜெர்காயி ஓடி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

அடுத்து சந்தித்தது ஒரு தவளை. அதன் மேல் டார்ச் அடிக்க அது கொஞ்சம் சங்கடமாகி முறைத்தது. சங்கடத்தின் காரணம் ஏதோ இரவு நேர முக்கியமான மேட்டராக இருக்கலாம். ரங்கா என் வேண்டுகோளுக்கிணங்க அந்த தவளையின் அனுமதி இல்லாமமலே அதை அவர் போட்டோ பெட்டியில் பதிவாக்கி கொண்டார்.

No comments: