Thursday, March 26, 2009

Therdhal

தேர்தல் காலம்,
வெள்ளை அணிந்த கொள்ளையர்களின்
வசந்த காலம்

தேர்தல் நாள், கரை படிந்த கரங்களை
தேர்ந்தெடுக்க என் விரல்கள் கரையாகும் நாள்

பிரச்சாரம், குரைக்கும் நரிகளின் ஓயாத ஊர்வலம்

நடிகர்கள், வாய்ப்பில்லாதவர்களுக்கு
வில்லனாக நடிக்க வாய்ப்புகள்

ஜனநாயகம் ,ஜனவில்லன்களின் கைய்யால்
பந்தாடப்படுவது

அறிக்கை, திருடர்களே இலவசங்கள்
பட்டியலிடும் வேடிக்கை

கட்சி பெயர்கள்,
எல்லா ஓநாய் கூட்டங்களுக்கும்
பெயர்கள் வேறு வேறு,
இதில் கட்சி தாவல் என்று செய்தி வேறு

அரசியல்வாதிகள், காரி உமிழ்ந்தும் மீண்டும் மீண்டும்
வாசல் வரும் கரை வேட்டிகள்

ஊராட்சி ஒன்றியங்கள் தயார் நிலையில்
வையுங்கள் நாய் வண்டிகளை,
வெளியில் வரும் சொறி நாய்கள் அனைத்தையும்
வேட்டையாடுவதற்கு

தாய்மார்களே தயார் நிலையில் வையுங்கள்
உங்கள் வெலக்கமாரை,
நாட்டை சீரழிக்கும் நரிகள்
வீட்டை சுற்றி வரும் நேரம்

4 comments:

salamsoft said...

excellent

Anbey Sivam said...

/*
ஊராட்சி ஒன்றியங்கள் தயார் நிலையில்
வையுங்கள் நாய் வண்டிகளை,
வெளியில் வரும் சொறி நாய்கள் அனைத்தையும்
வேட்டையாடுவதற்கு

தாய்மார்களே தயார் நிலையில் வையுங்கள்
உங்கள் வெலக்கமாரை,
நாட்டை சீரழிக்கும் நரிகள்
வீட்டை சுற்றி வரும் நேரம்
*/
No words can be better than this..

jbk_here said...

49(o) eruka kavalai yen

Sathish Kumar T said...

Good One