Monday, January 12, 2009

Mounam etthanai Alagu!!!

மௌனம் எத்தனை அழகு என்று

வெற்றியை ஒரு துளி கண்ணீரால்
ரசித்தவனக்கு தெரியும்!!

பொங்கிவந்த கோபத்தை ஒரு நொடி மௌனத்தால்
அணை போட்டவனுக்கு தெரியும்!!

பிறந்ததிலிருந்து மௌனமாக சுற்றி கொண்டிருக்கும்
பூமிக்கு தெரியும்!!

சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களுக்கு தெரியும்!!!

கண்களின் மௌன மொழிகளால்
காதலித்தவர்களுக்கு தெரியும்!!

தனிமையில் தன் மன ஓட்டத்தை
ஒரு நிமிடம் ரசித்தவனுக்கு தெரியும்!!

ஏன் இசையை முழுமையாக ரசிக்க கூட
மௌனம் தேவைப்படுகிறது!!

இதை மறந்த மனங்கள் இனியாவது
மௌனத்தை ரசிக்க பழகட்டும்,

அப்போது பரபரப்பான சாலையும்
சத்தமில்லாமல் மௌனமாக ரசிக்க
மனம் விரும்பிடும்!!

3 comments:

Kumar said...

Nice one...

PARK's Nothing ஸ்பெஷல் (Special).... said...

அழகு என்பதை ரசிக்க கூட...அமைதி வேண்டும்....
மௌனத்தில் மட்டுமே அமைதி கிடைக்கும்.......

மௌனம

மௌனம

மௌனம

மௌனம

இது மாதுரி command பண்ணாம ..மௌனம... இர்ருக முடியல .....

Abbasin Kirukkalkal said...

Antony neeyum kavithai eludha arambikkalamnu ninaikuaren