சாலை வண்டிகளின் ஓயாத சப்தம்
அதோடு கக்கும் அபாய புகை
என் கண்ணிலும் மூக்கிலும் போட்டி போட்டு செல்லும் தூசி
ஓய்வில்லாமல் இயங்கும் தொலைக்காட்சி
கணினியின் திரை வெளிச்சம்
நேரத்தை விரயமாக்கும் உப்பு சப்பிலாத விவாதம்
அமெரிக்க தொலைபேசி அழைப்பு
அதே ஜாவா ப்ரோக்ராம் மூன்று வருடமாக
இவை எல்லா வற்றிலும் என்னை துண்டித்துக்கொண்டு
பூங்காவில் ஒரு இருக்கையை தத்தெடுத்து
என் தனிமையை ரசிக்க ஒரு ரம்யமான சூழ்நிலை
இதோ என்னை சுற்றி
பெர்க்லீ சிகரட் அட்டை
நாக் அவுட் மூடி
பிஸ்கட் பாக்கெட் கவர்
பெண் தலையில் அணியும் ஹேர் பின்
வாட்டர் பாட்டில்
இன்னும் பல இப்படி
இந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரையும்
ஞாபகப்படுத்தியது
Wednesday, April 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment