Tuesday, November 24, 2009

காலையில் கோபத்திற்கு பின் உதிர்த்த எண்ணங்கள் அப்படியே !!!!

கோபங்களும் தாபங்களும் அடங்கிய பின் பல அர்த்தங்களை அறியப்படுத்தும்!!

என் கோபங்களின் பிறப்பும் இறப்பும் விசித்ரமானவை!!

கோபத்திற்கு பின் மன்னிக்கவும் என கேட்க தூண்டும்
சங்கோஜத்தை விட கோபத்தை அடக்குவது எளிது என தெரிகிறது!!

இருவரின் ஒருமுறை வறண்டு போன நட்பில்
அன்பு காவிரியை அதிகப்படி பாய்ச்சினாலும் ஈரமாவதில்லை !!
கோபத்தில் அடி வாங்கிய என் நண்பன் "திருக்குறள் படித்து விட்டு சினத்தை அடக்க முடியாவிடில் என் பயன்" என்றான்
"அதனால்தான் அடி உன் மேல் மெதுவாக வீழ்ந்தது"
பரிட்சையில் பாஸ் மார்க் கிடைத்தாயிற்று !!ஹை ஸ்கோர் பண்ண முயல்வேன்!!

என்னை இகழ்தல் மற்றவர் முன் இல்லாவிடிலும்
இகழ்தலே, அதற்கு குறைத்து மார்க் போட என் மனம் மறுக்கிறது!!!

Wednesday, July 1, 2009

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 3

குறிப்பு:கீழ் உள்ள பாகம் 1,2 ஐ படித்து விட்டு தொடரவும்

மலையிலிருந்து விளக்குகள் மிளிரும் ஊரை ரசிப்பது ஒரு சுகம்தான். அப்போ தூங்கிட்டு இருக்க ஊரை பாத்து வெட்டி பயலுக தூங்குரானுங்கனு தோணிச்சு.

ஏனோ வானுக்கும் பூமிக்கும் ஒரு இடைவெளி இல்லாமல் ஒரு இருட்டு கடலுக்குள் இருப்பதாகவே உணர்ந்தோம். காரணம் நட்சத்திரமும் லீவு போட்டிருந்தன, நிலவும் கூட யாரோட காதலுக்கோ தூது போயிடுச்சு. அப்படி ஒரு கருமையான இரவு.

இதோ எங்கள் படைகள் சிகரம் நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருந்தது. அந்த மலை பாதைதான் எவ்வளவு கல்லும் முரடுமாக, ஆனால் இந்த மானிட மனங்களுக்கிடையே காலம் தள்ளுவதை காட்டிலும் எளிமையாகவே இருந்தது. அதில் கைடு கையில் டார்ச்சுமின்ரி, காலில் சாதாரண செருப்புடன் மின்னல் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார். அவருக்கு கொஞ்சம் ஈடு கொடுத்தது நானும் ரங்காவும் மட்டுமே. உள்ள ஒரே ரணகளம்தான், வலிய வெளிய காட்டிகாம எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது. மற்ற வீரர்களுக்கு அங்கங்கு ஹால்டிங்கும்,கூடவே குளுகோசும்(ஆற்றல் ஊட்டி) தேவைப்பட்டதால், நடிப்பதில் எனக்கும் ரங்காவிற்கும் சிரமம் ஏதும் இல்லை. விக்ரமிற்கு ஆற்றல் ஊட்டி அவ்வப்போது கொடுக்கப்பட்டு உயிரூட்டப்பட்டார் பாவம். இது எதுவுமின்றி 50 பிராயத்தை கடந்த கைடு ஆச்சரியப்படுத்தினார். ஹி இஸ் த மேன்! எனக்கு தெரிந்த கன்னட பாசையில் கைடுடன் உரையாடி அவரை பற்றி தெரிந்து கொண்டது, அவர் இந்த மாறி படைகளை சொரிந்து பணம் பார்ப்பதோடு, கூடவே காய்கரி வியாபாரமும் செய்வதாக கூறினார்.

இதோ சூரியன் மலையுடன் இரவெல்லாம் ஒரே கரும் போர்வையில் புணர்ந்து விட்டு, மெல்ல வெட்கத்துடன் விழித்து பார்த்தான். நேரம் அதிகாலை 5.45 யை தொட்டிருக்கும். நாங்கள் புணர்ந்ததை டார்ச் அடித்து பார்த்து விட்டோம் என்ற வெட்கத்திலோ என்னவோ முகத்தை முழுதாய் எங்களுக்கு ஆதவன் காட்டவே இல்லை. இப்போ புரிந்தது மலை எப்புடி குட்டி போடுதுன்னு.

இதோ நாங்கள் சிகரத்தில். நாங்கள் இருந்த மலையின் அழகும் , உயரமும் பார்த்து ஆச்சர்யபட்டோம். இவ்வளவு தூரம் உயிரோடு வந்து விட்டோம். கைடுக்கு நன்றி. தளபதிக்கு நன்றி. குளுக்கோசிர்க்கு மிக்க நன்றி. ஆனால் கைடோ பேசிய தொகையை பெற்று கொண்டு உறவை துண்டித்து கொண்டான்.

மலை உச்சியில் அவரவர் வேண்டுதலை உரக்க வானுக்கு கத்தி கொண்டிருக்க,
விக்ரம் I am king of the world என்று கத்த, எனக்கு He is the KingKOng of the world என்று ஒலிப்பது போல் இருந்தது.

சிகரத்தில் நாங்கள் மட்டும்தான் என்று எண்ணி நுழையும் போதே பார்த்தால், ஒரு திருவிழா கூட்டம் டென்ட் போட்டு தங்கி இருந்தது. ஏதோ விடிந்தது பிடிக்காதது போல்,முடிந்தது அவர்கள் வேலை என்பது போல் கிளம்பி சென்று விட்டனர்.முன்னிரவே வந்து அவர்கள் தங்கி பலானதை பண்ணி இருக்க கூடும் என்று ஊகிக்க முடிந்தது. எங்களை தடுத்த காவலாளியின் திருட்டுத்தனமும் வெளுத்தது. இந்த போலிஷ்காரங்களே போலிதான் எஜமான்.

நடேசும் ரங்காவும் ஏதோ P.C.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்து போட்டோ எடுத்தாங்க. இந்த பொருமல் வேற ஒன்னும் இல்ல, வேற யார்கிட்டையும் கேமரா இல்ல.

மலையில் சுற்றி திரிந்த மேகம் உடலுக்குள் ஊடுருவி கிச்சு கிச்சு மூட்டியது. அதை முழுதாக அனுபவிக்க எண்ணி என் கவசத்தையும்(ஜெர்கின்) கழட்டி எரிந்து சுற்றினேன். என்னால் எத்தனை மேகங்களை முத்தமிட்டு அணைக்க முடியுமோ அத்தனையையும் அணைத்து கொண்டேன்.

இந்த பழங்கால புலிகேசிகள், பயந்து ஒளிந்து கொள்ள ஒரு மலை
உச்சியில் ஒரு மண்டபத்தை கட்டி விட்டு கூடவே ஒரு கோவிலையும் கட்டி விடுவார்கள். கேட்டால் கோவிலுக்காகதான் இந்த மலை உச்சி வந்ததாக சந்ததி நினைத்து கொள்ளட்டும் என நம்ப செய்ய. என்ன கள்ள தனம். வழக்கம் போல் இந்த மலை உச்சியும் ஏதோ புலிகேசியின் புகலிடமாக இருந்திருக்கு. அந்த மண்டபத்தில் இரு நாய்கள் உல்லாசமாக இப்போது வசித்து வருகின்றன. புலிகேசிகளின் வாரிசுகள்.
மண்டபதிற்கு அருகில் நெருப்பு மூட்டி இருந்தது. இதோ ஓசியில் குளிர் காய பயணப்பட்டு விட்டோம் மொத்த படையும்.

ஸ்ரீராம், பெயரிற்கு ஏற்ற முகம். அமைதி கலந்த வசீகரமான புன்னகை எட்டி பாத்து கொண்டே இருக்கும். இந்த ராமனுக்கு கொஞ்சம் தாடி, ஒரு வெள்ளை அங்கி எல்லாம் இட்டு பார்த்ததில், ஜீசஸ் கிறிஸ்ட் போலவே இருந்தார். இந்த ஜீசஸ் ராம், கொஞ்சம் அதிகமாகவே அசர்ந்தார். அசந்து குளிர் காய்ந்த இடத்தில் மட்டையானார். விட்டிருந்தால் கரி கட்டையாகி இருப்பார். நான் அவரை சுய நினைவுக்கு திருப்பி மேல் படர்ந்திருந்த சாம்பலையும் துடைத்து , ஜீசஸ் ராமிடம் இருந்து புண்ணியம் தேடி கொண்டேன்.

மீண்டும் தளபதி தலை மறைவு. நானும் நடேசும் தளபதியை தேடி கூக்குரலிட்டோம். தளபதி எந்த புதரில் இருந்தாலும் முடிப்பதை முடித்து விட்டு வந்து சேரவும் என்னும் சத்தம் மலை முழுவதும் ஒலிக்க செய்தோம். வழக்கம் போல் தளபதி காமெடியை அரங்கேற்றி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு குன்றின் மேல் நல்லவர் போல். நடேஷ் அவர் அருகில் நெருங்கும் போதே, நடேஷிடம் முன் ஜாக்கிரதையாக நீ பக்கத்தில் வரும் போதே கப்படிக்குதுனு அட்வான்சா தளபதி எடுத்து விட்டு அவரே அவரை வாரி கொண்டார்.

மற்ற நண்பர்களும் இணைந்தனர். கீழ் நோக்கி புறப்பட படை தயாரானோம். எங்களுக்கு வழிகாட்டியாக மண்டபத்தில் இருந்த நாய் இணைந்து கொண்டது. வெற்றியுடன் போர் முடிந்து திரும்பினோம்.

நீங்க கற்பனை செய்த நிகழ்வுகளை இந்த புகை படங்களுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளவும்.

நடேஷ் ஆல்பம்

ரங்கா ஆல்பம்

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 2

இவன் இப்படி நடு நிசியில் மலையை மூன்னுறிற்கு ஏலம் விடுகிறானே இது முதல்ல அந்த மலைக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தொடர்ந்து "அய் யார ஏமாத்த பாக்குற முதல்ல இங்க மலை இருக்கானு லைட் அடிச்சு காமி அப்புறம் மூன்னுறு தருகிறோம என்று கூற வேண்டும் போல் இருந்தது.

காவலர்கள் என்ற பெயரில் ராபிச்சை எடுத்துகொண்டிருகும் அவனிடம் மேலும் வாதிட பயன் ஏதுமின்றி குதிரைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அப்பொழுதுதான் புரிந்தது எந்த குருட்டு தைரியத்தில் மலைக்கு ஆள் துணை ஏதுமின்றி நடு இரவில் செல்வது என்பதை யோசிக்காமலே பேரம் பேசிகொண்டிருந்தோம் என்று உணர்ந்தோம்.கொஞ்ச நேரத்தில் எங்க டைம் காமெடி டைம் ஆயிருக்கும் இப்படி மூன்னுறையும் கொடுத்து நடுஇரவில் நட்டாத்தில் விட்டது போல். நடப்பது நன்மைக்கே என்று இடத்தை விட்டு காலி செய்தோம்.

அவ்வபோது வெறுப்பில் தளபதி என்னால்தான் காரியம் கேட்டது போல் என்னை திட்டியதுதான் வருத்ததிற்குரியது, அவர் செய்த நாற்பது ரூபாய் காமெடியை அறவே மறந்து.
திரும்பிய வழியில் இன்னொரு சொறிபடை வந்ததை அறிந்து நிகழ்ந்ததை கூறி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அது கன்னட படை. அந்த காவலாளிகள் என்ற போர்வையில் இருந்த ராப்பிச்சை காரனை கரெக்ட் பண்ணவும் வசதியா இருக்கும் என அவர்களுடன் நானே முன்வந்து பேசினேன். அப்படியே காவிரி பிரச்சனையையும் ஒரு பிட் போட்டு முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணமும் இருந்தது.

இதோ எதிர்பாராத சம்பவம்.

ஒரு எதிர்பாராத சம்பவம் இன்னொரு எதிர்பாராத சம்பவத்தால் சரி செய்ய படுகிறது.
டூரிஸ்ட் கைடு என்ற பெயரில் குரங்கு தொப்பி போட்ட ஒருவர் எங்கு இருந்து குதித்து வந்தார் என்று யோசிப்பதற்குள், வந்து தளபதியுடன், மலைக்கு குறுக்கு வழியில் அழைத்து செல்வதாக பேரம் பேச தொடங்கி விட்டார். இவர் மரத்தில் ஒளிந்து இருந்து ஏமாந்து வரும் படைகளை எல்லாம் வழி மறித்து சொரிந்து விடும் புண்ணிய தொழில் செய்கிறவர் போல. அவர் குதிரைகளை மலை அடிவாரத்தில் கட்டி பார்க் செய்வதற்கும் ஏற்ப்பாடு செய்து தருவதாக கூறினார். இத்தனையும் அதே மூன்னுறில் . இந்த டீலிங் அந்த நேரத்தில் எங்களுக்கு ரெம்ப பிடிச்சு இருந்தது. மேலும் நம்முடன் அந்த கன்னட படையையும் சொரிந்து கொண்டால் மூன்னுறு பாதியகுமே என்ற அற்ப ஆசை வேறு.

என்ன செய்வது அந்த சொறி படை எங்களை வெறுப்படைய செய்தார்கள் வேறு திட்டத்துடன். என்ன செய்வது பேசியதில் இரு படைகளுக்கும் சொறிவதற்கு உடன்பாடு ஏற்ப்படவில்லை. எங்க தளபதியையும் படையின் பலத்தையும் பார்த்து கொஞ்சம் நடுங்கியது போல் தோன்றியது. தளபதியின் ஆணை படி மூன்னுறு கொடுத்து கைடுடன் தனியாகவே சொரிந்து கொள்ளலாம் எனும் முடிவு ஒரு மனதாக அமலானது.

இதோ குதிரைகளை கைடு காட்டிய இடத்தில கட்டி ஓய்வெடுக்க வைத்து விட்டு, கிளப்புங்கள் என்று உற்சாகத்துடன் டார்ச்சையும் ஆன் செய்து கிளம்பி விட்டோம் சிகரத்தை நோக்கி. சிகரம் அடிவாரத்திலிருந்து சுமார் 5 KM தொலைவில் உள்ளது என்று கைடு கூற ,நாங்க கொஞ்சம் ஜெர்காயி பயந்தோம். இருந்தாலும் தளபதி தந்த உற்சாகத்தால் அது மறைந்தது.

இந்த சீன்ல கவுண்டமணி தலையில் டார்ச் வைத்து கொண்டு செய்யும் காமெடியே நினைவுக்கு வந்தது. அந்த மாறி இப்ப இன்னொரு காமெடி சீன் இருக்கு. அடிவாரத்தை கூட தாண்டவில்லை அதற்குள் அடிவயிற்றை கலக்கி விட்டது அருணுக்கு. இதே சீன் தளபதியை வைத்து அரங்கேறி இருந்ததால் சக வீரர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருட்டிலே வயலுக்கு ஒரு வழியாக அருண் உரம் போட்டு மற்ற படி முடித்து விட தொடர்ந்தோம். இதில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கைடு எங்களை அவசரபடுத்தி கொண்டிருந்தது காமெடி.

மலை இருளில் கரிய நிற ஆடை அணிந்து உறங்கி கொண்டிருந்ததால் ,முழுதாக அது மலைதான் என்று உணரவும் முடியவில்லை. ஏதோ கைடு காட்டும் பாதயை தொடர்ந்தே சென்றோம். டார்ச்சை வைத்து கொண்டு மழையின் கூந்தலை பேன் பார்த்து கொண்டே ஏறுவது போல்.
மலையில்தான் எத்தனை சின்ன சின்ன குன்றுகள். மலை எவ்வாறு இத்தனை குட்டி போட்டது என்று ஊகிக்க முடியவில்லை. இன்னும் குட்டி போட்டு கொண்டுதான் இருக்கானு மனசுல ஒரு கேள்வி வேற.

முதலில் மலையில் சந்தித்த ஜீவன் ஒரு பூரான் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தது. எப்படி இந்த மலைக்கு வந்திருக்கும். எத்தனை நாள் ஆகி இருக்கும் என்று யோசிக்கும் போதே மற்றவர்கள் கடந்து தூரமாக, ஜெர்காயி ஓடி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

அடுத்து சந்தித்தது ஒரு தவளை. அதன் மேல் டார்ச் அடிக்க அது கொஞ்சம் சங்கடமாகி முறைத்தது. சங்கடத்தின் காரணம் ஏதோ இரவு நேர முக்கியமான மேட்டராக இருக்கலாம். ரங்கா என் வேண்டுகோளுக்கிணங்க அந்த தவளையின் அனுமதி இல்லாமமலே அதை அவர் போட்டோ பெட்டியில் பதிவாக்கி கொண்டார்.

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 1

ஸ்கந்தகிரி - பயண அனுபவம் என் மனம் எடுத்த நினைவு படங்கள்,இங்கு பிரிண்ட் போட பட்டிருகின்றன ரசிப்பதை ரசிக்கும் படியாக எழுதுவது கொஞ்சம் கஷ்டமாதாயான் இருக்கு என்ன பண்றது ஒரு படைப்பாளினு பார்ம் ஆயாச்சு பெங்களூர் ஸ்கந்தகிரியில் இருந்து 80 km தொலைவில் சுவாசித்து கொண்டிருக்கும் ஒரு மலை பயண நாள் அன்று மேகம் கொஞ்சம் மப்பாதான் இருந்த்து, மலை ரசிக்க மழை தடை ஆகி விடுமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஆனால் மழையும் கடும்குளிரும் கொஞ்சம் வழிவிட்டு எங்கள் பயணத்தை இதமாக்கின இதோ எட்மண்ட் ஹிலரிகளாக பிறப்பட்டு விட்டோம் நடு இரவில் ஏதோ போர்க்கு செல்வது போல் எட்டு வீரர்கள்(அமீன்,மொகைதீன்,ஸ்ரீராம்,ரங்கா,நடேஷ்,விக்ரம்,அருண் மற்றும் நான் )இதில் அமீனை தவிர உள்ள மற்ற ஆறு பேருக்கும் நான் இன்றுதான் அறிமுகம் நான்கு குதிரைகள் எங்க இரு சக்கர வாகனங்கள்.கவசமாக ஜெர்கின்கள் .வாளுக்கு பதில் கையில் டார்ச் லைட் இந்த சொறி படைக்கு தலைவலி இல்ல தளபதி அமீன் இவர் சொறிமுகம் மன்னிக்கவும் அறிமுகம் சொல்லியே ஆக வேண்டும் தளபதி என்றவுடன் கட்டபொம்மன் ரேஞ்ச் எல்லாம் இல்லை இது ஒரு 24 ம் புலிகேசி மண்டையில் மூளைக்கு பதில் மண் இருப்பதால்,கொஞ்சம் முடி அதிகமாக வளந்திருக்கும்.அதை அழகு என்று அவர் நினைத்து கொண்டு,உலகமும் அதே எண்ணுகிறது என்று ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி. மற்றவர் சொரிமுகம் அவ்வப்போது சொரியப்படும்
இருட்டு கடலில் எங்கள் குதிரைகள் படு வேகத்தில் நீச்சலடிக்க துவங்கின.விளக்குள்ள சாலைகளும்,விளக்குகள் இல்லாத சாலைகளும் அவ்வபோது இரவையும் பகலையும் மாறி மாறி காட்டி கொண்டிருந்தன.

இதோ எதிர்பாராத சம்பவம்

இருள் பல காரியங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்
ஆனால் வண்டி ஓட்டுவதற்கு நிச்சயமாக இல்லை

நடேசன் நட்டானது அப்படி விளக்கில்லாத ஒரு சாலை
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றாக இருந்த சாலை
இரண்டாக பிரிந்திருந்ததை அறியாமல்
பின் அமர்ந்து வந்த சக வீரர் விக்ரமின் ஒரு மொக்கை ஜோக்கை
ரசித்து கொண்டிருந்த நடேசன் நடுவிலே சென்று விபத்துகுள்ளகினான்

சென்று பார்க்கையில் சரியான அடி, அவனுக்கு இல்லை
அவன் குதிரைக்கு. குதிரை அடிவாங்கி அவனையும் விக்ரமையும் காப்பாற்றியது. விக்ரம் ஒரு சட்ட கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடதக்கது.விபத்தில் இருந்து சாதரண நிலைக்கு திரும்ப எடுத்த நேரம் முடிந்தவுடன் பயணம் தொடர்ந்தது

அடுத்த எதிர்பாராத சம்பவம்.
இது ஒரு காமெடி சீன். தளபதிக்கு சக வீரகளிடமிருந்து பயணம் தொடங்கும்போதே 60 KM குள் செல்ல வேண்டும் என வேண்டுகோள்.அதையும் மீறி வேகமாக சென்று எங்கள் பார்வையில் இருந்து மறைந்த தளபதி, ஒரு ஓரமாக சாலையின் அருகே அன்லோடிங் செய்து கொண்டிருக்க நாங்க ஷாக் ஆயிட்டோம். அப்புறம் என்ன அவசரத்தை என்ன செய்வது என்று தலையில் அடித்து கொண்டு தளபதிக்கு குடிக்க எடுத்து வந்த நீரை கொடுத்து அன்லோடிங்கை அமைதியாக முடித்து விட செய்தோம்.

இதற்கெல்லாம் காவல் போல நின்று கொண்டிருந்தது நான், மொகைதீன்(என் குதிரையில் பின் அமர்ந்து வருபவர்),அருண்(அமீனுடன் பயணிப்பவர் பாவம்). இந்த சம்பவம் முடிந்த நிலையில் மற்ற தோழர்களும் வந்து இணைந்தனர். அடுத்து சொல்லவா வேண்டும் , தளபதியை கொஞ்சம் மொகைதீன் இந்த சீனை வைத்து டேமேஜ் செய்ய பாவம் தளபதி பப்ளிக் பப்ளிக் என்று கட்டுப்படுத்த முயன்றும் இயலவில்லை. அவ்வபோது தளபதி இந்த சீனால் வாரிவிடபட்டார்.

பயணம் தொடர்ந்தது ஸ்கந்தகிரிக்கு. இடது புறத்தில் செல்லும் வழியை ஒரு வழியாக அடைந்தோம். அது ஒரு தலைவர் சிலையால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தலைவர்கள் சாலைகளின் பெயரிலும், பேருந்து நிறுத்த பெயரிலுமே பெயரளவில் இருகிறார்கள்.
அவர்களை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும்
என்பதை தப்பாக புரிந்து கொண்டோமோ என்னவோ.எத்தனை பேர் அண்ணா சாலை என்று அழைக்கும் போது அறிஞர் அண்ணாவை நினைப்பவர்கள். எனினும் அந்த சிலை ஸ்கந்தகிரிக்கு வழிகாட்டியாக
கம்பீரமாக இருந்தது.

தொடர்ந்த வலியின் வாசனை வைத்தே கண்டு பிடித்தேன் அது கிராமங்கள் என்று.அந்த மணம்தான் அங்கு வாழும் வெள்ளந்தி மனிதர்களின் மனம்.

அடுத்த எதிர்பாராத சம்பவம். ஸ்கந்தகிரியில் எங்களுக்காக மலை அடிவாரத்தில் தூங்குவது போல் காத்திருந்தது. இது காமெடி கலந்த சீரியசான சீன்.

ஸ்கந்தகிரி மலை அடிவாரம். நள்ளிரவு 2 மணி இந்த அடிவாரமும் வித்தியாசமின்றி ஒரு கோயில் மண்டபத்துடன் இருந்த்து.குதிரைகளை கட்டி பார்க் செய்வதற்குள் மண்டபத்திலிருந்து இரு உருவங்கள் எழுந்து நின்றன.அவைகள் பேய்கள் என்று ஊகிபதற்குள் அருகே வந்து காவல் அதிகாரிகள் என்று உறுதி செய்தன.

முதலில் மலைக்குள் செல்ல அனுமதி இல்லை எனறார்கள்
பிறகு 7 மணிக்கு மேல் வாருங்கள் என்றனர்
பிறகு நாங்கள் குழம்பி நிற்கையில், வெட்டுவதை வெட்டி விட்டு
பார்க்க செல்லுங்கள் என்றனர்.

இத்தனையும் கன்னடத்தில் அவர்களுடன் உரையாடி இல்லை போராடி சக மக்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் என்றாகி விட்டது

இதோ இந்த சீனில் தொலைந்து போன தளபதி, திடீர் என்ட்ரி ஆகி நாற்பது ரூபாயை காவலர் கையில் வைத்து காமெடி செய்ய, கொதித்து எழுந்த அந்த காவல் அதிகாரி. சில பல கன்னட வார்தைகளால் அர்ச்சனை நடத்தி கொஞ்சம் டெரர் ஆனது போல் நடித்தான்.

இப்பொழுது கன்னடத்தில் உரையாட தெரிந்த ஒருவர் உதவி மிகவும் தேவைபட்டது. அப்பொழுதுதான் அருண் என்டர் ஆகி கன்னடத்தில் உரையாட ஆரம்பித்தார். அட பாவி இவ்வளவு நேரம் நான் பைத்தியக்காரன் போல் அந்த போலீசிடம் போரடினேனே இவரை வைத்து கொண்டு என நினைத்து கொண்டேன்.

காவலனுக்கு லஞ்சம் முன்னூறு என்று அறிந்தவுடன்
நாற்பதிலிருந்து, 100,200௦௦...என்று படி படியாக முன்னேறி 300௦௦ ல் நின்றோம்.
ஆனால் அந்த போலீஸ் இப்போது மனதை மாற்றி கொண்டு திரும்பி சென்று விடுங்கள் என்ற பாட்டை மறுபடியும் பாட தொடங்கினான்

Thursday, June 4, 2009

Theme to celebrate Environment Day from Me

Please leave your vote for the one you liked...Thanks

"One day to think beyond Cubicle, All days to act up on"

"To water the plants, Plant the plants"

"There are people to fight for earth, Lets unite to save the earth"

"Lets inject G(Green) +ve to our neurons today"

"Lets our blood be red, Lets make our mind green"

"Wish Green, Think Green"

"To love nature, think about nature"

"Earth cant insure its life,Its our duty to ensure earth has a life"

"To Breath O2, Reduce CO2"

Tuesday, June 2, 2009

அரவணைப்பு

இரு சக்கர வாகனத்தில்
ஒரு மினி குடும்பம்!!

குழந்தையை ஒரு கையில்
கணவனை மறு கையில்
தாங்கியவாறு தலைவி..

வாகனம்
பாலத்தில் ஏறுகிறது
'U' வளைவில் வளைகிறது
பள்ளங்களில் குதிக்கிறது
வேகத்தடையில் சீறுகிறது

இத்தனையும் தாலாட்டாய்
நினைத்து தூங்கும் குழந்தை!!

குழந்தைக்கு,
தாயின் அரவணைப்பில்
போர்களமும் தொட்டில்தான்!!
பூகம்பமும் தாலாட்டுதான்!!

Tuesday, May 12, 2009

Nam Vaaku Nam Naatirkaka

அரசியல் கட்சிகள் நடத்தும் காட்சிகள்
அரங்கேறிகொண்டு இருக்கிறது

இலங்கை தமிழரை மறந்து இருந்த கட்சி
தமிழ் ஈழம் தருவோம் என்று குரல் எழுப்புகிறது

தமிழ் ஈழம் ஆதரித்த கட்சிகள்
அந்த கொள்கைக்கு எதிர் கட்சியுடன் இனைந்து கொண்டன

அந்த எதிர் கட்சிகள் தேர்தலுக்காக
அந்த கொள்கையை ஆதரித்து கேவலமின்றி
இங்கு பிரச்சாரம் செய்கின்றன

கொள்கையில் ஒரு பிடிப்பில்லை

ஏன் இங்கு தமிழ் ஈழத்திற்காக
குரல் கொடுக்கும் தமிழ் மக்கள்
இவ்வளவு நாள் தேர்தலின் பொது
இந்த பிரச்னையை முன் வைத்தார்களா

தமிழகத்தில் அடிக்கடி ஏற்ப்படும்
மின் வெட்டிற்கு கொடுக்காத குரல்
ஈழ தமிழர்க்கு கொடுக்கபடுகிறது

ஏன் இதில் தமிழன் நலம் பாதிக்க படவில்லையா

இல்லை போராடும் தலைவர்கள்
மின்வெட்டை பார்த்ததில்லையா

விவசாயிகள் தூக்கிலிட்டு தொங்கும் பொது
உங்கள் குரல் எங்கிருந்தது

ஈழ பிரச்சனயை முன்னிறுத்துங்கள்

அதற்காக உள்ளூர் பிரச்சனையை
மறந்து விட்டு வாக்கு அளியுங்கள் என்று
சொல்ல எந்த அனுமதியும் இல்லை உங்களுக்கு

என் வாக்கு முதலில் என் நாட்டின்
தலை எழுத்தை தீர்மானிக்கட்டும்

நான் இலங்கை தமிழர்க்காக மத வாத கட்சிகளுக்கு
ஒட்டு போடா முடியுமா என்ன

கோத்ரா சம்பவமும் அங்கு இறந்த
முஸ்லிம் தோழர்களின் உயிர் இன்னும்
நினைவில் இருந்து நீங்க வில்லை

இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில்
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கால் சதவிகிதம் கூட இல்லை
அது பிரச்னை என்று தோன்றவில்லை

அதற்கு போர்க்கொடி பிடித்து தீர்வளிக்க வேண்டும்
என்று தோன்றாத போது இலங்கை தமிழரை காக்க வேண்டும்
என்று தேசத்தில் உணர்வில்லை என்ற கேள்வி நியாயமற்றது

நாம் தனியாக இருந்து
எதையும் பெற்று விட முடியாது

தமிழன் உணர்வு ஒற்றுமையை ஒருமைப்பாட்டை
உணர்த்தட்டும்
இந்தியாவில் பிரிவினையை வேண்டாம்
இல்லை தமிழ்நாட்டிற்கும்
தமிழ் ஈழம் நிலை வர வியப்பில்லை

வாக்கு நம் நாட்டின் ஐந்து வருட தலை எழுத்தை
நிர்ணயிக்க போவது
அதில் நம் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு
முதலிடம் தந்து வாகளியுங்கள்